ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி ஆட்சி நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி ஆட்சி நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சமஷ்டி தீர்வை நோக்கி நகர்வதற்காகவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் வலியுறுத்தியிருந்தோம்.

அத்துடன், கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply