
பொலிஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு தனியான சம்பள கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக தற்போது திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
இன்றைய (28) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல வருடங்களுக்குப் பின்னர் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
ஒரு பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 6,441.54 ரூபாய், ஒரு SI-க்கு 6,551.72 ரூபாய், ஒரு IP-க்கு 7,040.24 ரூபாய், ஒரு CI-க்கு 7,655.74 ரூபாய், ஒரு ASP-க்கு 8,244.11 ரூபாய், SP, SSP-க்கு 9,925 ரூபாய், DIG, சீனியர் DIG-க்கு 11,118 ரூபாய், IGP-க்கு 13,223 ரூபாய் என இந்த வருடம் அதிகரிக்கிறது.
மேலும், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளின் தற்போதைய அடிப்படை சம்பளம் 29,540 ரூபாய். இது இந்த வருடம் 44,293 ஆகவும், 2026இல் 46,921 ஆகவும், 2027இல் 49,550 ஆகவும் உயரும்.
அதேபோல் இதனுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கும் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருந்தார்.