
தற்போது அதிகரித்துள்ள தேங்காய் விலையானது வைகாசி மாதத்துக்கு பின்னர் மீண்டும் பழைய விலைக்கு திரும்பும் என தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.
தேங்காய் இறக்குமதிக்காக அனுமதி பெற்ற நிறுவன உரிமையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதால், 200-250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் விலை குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.