
மறைந்த சாந்தனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘சாந்தன் துயிலாயம்’ இன்று (28) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
‘சாந்தன் துயிலாயம்’ எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், சாந்தனின் புகழுடல் புதைத்த இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கால பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி காலமானார். அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தாயக மண்ணில் புதைக்கப்பட்டது.
அவரது விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் 33 வருடங்களாக போராடி வந்தனர்.
33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே இறந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் துயிலாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.