
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரனத்தொட்ட ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.