
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவின் தலைவராக ஒரு வைத்தியர் செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
‘சூப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பை நடாத்தி வருபவர் ஒரு வைத்தியர் என்றும், அவர் ஏற்கனவே கல்முனையில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிகிறார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த உலகம் பயனற்றது, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது, புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று பிரசங்கிக்கும் இந்த தீவிரவாதத் தலைவர், கடவுளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ய மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்று அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
அத்துடன் தலதா மாளிகையில் கண்காட்சி நடத்தப்பட உள்ள நிலையில், இந்த தீவிரவாதக் குழுவானது குழப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புக் குறைவு என்றும் கூறியுள்ளார்.
ஞானசார தேரரின் இந்த கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன், இனங்களுக்கு இடையில் விரிசலையும் ஏற்படுத்துவதாக சமூக ஆரவலர்கள் விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.