
இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று மாதம்பே, தேவகொட பிரதான வீதியின் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொடை பொலிஸாரின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரேணுகா உட்பட ஒரு பெண் பொலிஸார் குழு சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை கண்டு மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் குழந்தையின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலும், குழந்தையின் தாயார் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.