
SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வங்கி கணக்கு தொடர்பாக சமூக வகைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கிகணக்கில் 9 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அவர் புதியதாக வீடு கட்டி வருவதாகவும், அதன் பெறுமதி 6 கோடி எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கிருஸ்ணாவுக்காக வாதாடுவதற்கு 10 வழக்கறிஞர்கள் மல்லாகம் நீதிமன்றுக்கு சென்றிருந்தார்கள்.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவன் தனது கருத்துக்களை முன்வைத்து சர்சைக்குரியவருக்கு பிணை கிடைக்காது செய்தார். பொலிஸ் உத்தியோகத்தர் ராகவனுடன் மூன்று வழக்கறிஞர்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் பிணை வழங்க கூடாது என்று வாத்திடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவுவருவதாக காட்டிக்கொள்ளும் யூடியூபர் கிருஸ்ணா, யுவதி ஒருவர் தொடர்பில் காணொளி வெளியிட்டு சிக்கலில் மாடிக்கொண்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.