யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பௌர்ணமி நாளான இன்று (13) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு,
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,
எமது நிலம் எமக்கு வேண்டும்,
சட்டவிரோத விகாரையை உடனே அகற்று,
சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு, காவல்துறை அராஜகம் ஒழிக
போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன், அவர்கள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply