
சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், விரைவில் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
எந்த வகையிலும் விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை.
சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்று உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.