
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்காக கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது, ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள்ளும் கூட்டணியை விரிவுபடுத்த விரும்பினால், காலக்கெடுவிற்கு முன்பே அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.