
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியானது, வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்கு இன்று (14) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
அதன்படி வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.
இதற்கான கட்டுப்பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் செலுத்தியிருந்தனர்.
மேற்குறித்த நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சியானது வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.