
அக்மீமன பகுதியில் துப்பாக்கிகள் பலவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாகி, ரிவோல்வர், ரிப்பீட்டர் துப்பாக்கி, எயார் ரைபிள் மற்றும் 49 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.