
பிரதான ரயில் மார்க்கத்தின் கடுகண்ணாவ மற்றும் பிலிமதலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுகண்ணாவ ரயில் குறுக்கு வீதியில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக நாளை (15) காலை 10.00 மணி முதல் நாளை மறுநாள் (16) காலை 6.00 மணி வரை குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றிலுமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சிரமத்தைக் குறைக்கவும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.