8 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது

8 வயதான சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கடமை புரிந்து வீடு சென்றிருந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்த நிலையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir