
இராணுவத்தினரின் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறும் என இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.