கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் கொழும்பு – 05, நாரஹேன்பிட்டியில் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“நாரஹேன்பிட்டி, தாபரே மாவத்தையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டது. அதனை அண்டிய பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது.
நாங்கள் வழமையாகச் செய்யும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இதனால் கொரோனா வைரஸ் இருப்பவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அது பரவாமல் தடுக்கலாம். மக்கள் மிகவும் பொறுப்புடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.