கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் சித்திரைப் புத்தாண்டு மலிவு விற்பனை,
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை,
காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் உணவுப் பொருட்கள், சேலைகள், ஆடைகள், அழகுசாதனப்
பொருட்கள் என்பன மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்தோடு,
விசேட நிகழ்வுகளும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பும் நடைபெறவுள்ளன.
15/1, பகதலே வீதியில், கொழும்பு மகளிர் இந்து மன்றம் நடத்திவரும் ‘அன்பு
இல்லம்’ என்ற முதியோர் இல்லத்துக்குத் தேவையான வசதிகளைச்
செய்துகொடுக்கும் பொருட்டே, இந்த மலிவு விற்பனை நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
