உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்களில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 363 விளையாட்டுக் கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், கடந்தாண்டு பெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தாமாக முன்வந்து ஆயுதம் ஏந்திப் போரிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
-T01