நெல் விவசாயிகளுக்கு யாலா பருவத்தில் உர மானியமாக 40,000 ரூபா வரை கிடைக்கும்!

எதிர்வரும் யாலாப் பருவத்தில் உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு நெல் விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை நிதி மானியமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, 2023 யாலா பருவத்தில் உரங்களைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர் வரையான நிதி மானியமாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபா 20,000 வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியைக் கோரியிருந்தார்.

இதேவேளை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள மேலும் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியுடன் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை 3 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையின் அனுமதியைக் கோரினார்.

இந்தத் திட்டத்திற்காக. 16.01.2023 அன்று, 2 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களையும் உத்தேச வேலைத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2.85 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இரண்டு மாத காலத்திற்கு அரசாங்கம் வழங்குவதற்கு 13 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply