வெல்லவாயவில் கப்- முச்சக்கரவண்டி விபத்து; சாரதி போதையில் இருந்தமை உறுதி!

வெல்லவாய – தனமல்வில வீதியில் யாலபோவ பகுதியில் நேற்று முன்தினமிரவு கப் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், விபத்தில் உயிரிழந்தோர், முச்சக்கர வண்டியின் சாரதி (44), அவரது மனைவி (42) மற்றும் தந்தை (70) என அவர்கள் தெரிவித்தனர். அவர்களது குழந்தை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கப் வண்டியின் சாரதி போதையுடன் வானத்தைச் செலுத்தியதால் விபத்து சம்பவித்ததாகவும், விபத்தையடுத்து அப்பகுதியை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட கப் சாரதியைப் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply