சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்திற்கு அமைவாக, அரச மற்றும் இணை அரசாங்க அமைப்புகளுடன் இணைந்துள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதில் இருந்து விலகியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொழிற்சங்கத் தலைவர்கள், ஸ்தாபனச் சட்டத்தின்படியும் சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று கூறிய மனுஷ நாணயக்கார, கடந்த 20 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலை செய்யாத தொழிற்சங்க தலைவர்களுக்குச் சம்பளம் வழங்குவது சரியா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
T01
