இலங்கை மத்திய வங்கியின் சட்டமூலம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தில் கூறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் 54 பக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply