கொத்து மற்றும் பிரைட் றைஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!

இன்று (ஏப்ரல் 5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, பிரைட்றைஸ் மற்றும் சோற்றுப்பொதி மற்றும் கறி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப் பொருட்களின் விலைகள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைக் குறைப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலை 30 ரூபாவாகவும், ஒரு கப் பால் தேநீரின் விலை மாற்றமின்றி 90 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட், உள்நாட்டு திரவ பெட்ரோலியம் (எல்பி) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1,005 குறைக்கபட்டு இப்போது ரூபா. 3,738 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூபா. 1,502 ஆகவும்,  2.3 கிலோ சிலிண்டர் ரூபா. 700 ஆகவும் விலைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட விலை ரூபா. 3,990 ஆகவும் 5 கிலோ சிலிண்டர் ரூபா. 1,596. ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தையும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அண்மைய உயர்வின் பயனையும் கருத்திற்கொண்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply