இலங்கைக் குற்றவியல் பதிவேடுகளில் பல்வேறு குற்றச் செயல்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியும் (IRC) பாதாள உலக நபரான அங்கொட லொக்காவின் கூட்டாளியுமான ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்த அத்துருகிரியே ஜெரோம் சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக STF இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் அத்துருகிரியவில் உள்ள மில்லேனியம் சிட்டியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துருகிரியவில் இடம்பெற்ற வழக்குத் தொடர்பில் சந்தேகநபருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
T01
