ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் CPC க்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கி வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்புக்கள் பொருத்தப்படும் என்றும், பின்னர் அனைத்துத் தனியார் எரிபொருள் தாங்கி வாகனங்களும் ஜி.பி.எஸ். மூலம் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் சேமிப்புக் கொள்ளளவைப் பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் காஞ்சன தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் சேமிப்புத் திட்டம், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகம் குறித்து ஆய்வு செய்வதற்காக CPC மற்றும் CPSTL நிர்வாகத்துடனும், அதிகாரிகளுடனும் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்போது, QR நடைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காஞ்சன குறிப்பிட்டுள்ளார்.
T01
