லூயிஸ்வில்லி, கென்டக்கி வங்கித் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்!

அமெரிக்காவின் கென்டக்கி, லூயிஸ்வில்லில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலானது இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புப் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்கள் 40 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்த ஒன்பது பேரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொலிஸ் படையில் இணைந்த ஒரு புதிய பொலிஸ் அதிகாரியும் அடங்குகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த அதிகாரி தலையில் சுடப்பட்ட நிலையில் மூளை சத்திரசிகிச்சைக்குப் பின்னரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்ற மூன்று நிமிடங்களின் பின் பொலிசார் பதில் தாக்குதல் நடத்தியதோடு, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்தாரியைச் சுட்டுக் கொன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று, உள்ளூர் நேரப்படி சுமார் 8:30 மணியளவில் நகர மையத்தில் உள்ள பழைய தேசிய வங்கியில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply