முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்தில் கோப்பு களவு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத நபரால் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இலங்கசிங்கவிடம் நேற்று அறிவித்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாரஹேன்பிட்டிப் பொலிஸாரிடம் இருந்து பொறுப்பேற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இரவு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை வானில் கொழும்பு 7, லோங்டன் பிளேஸில் உள்ள முன்னாள் சட்டமா அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து, அலுவலகத்தில் உள்ள அனைத்துக் கோப்புக்களையும் சோதித்த பின்னர் ஒரு கோப்பை எடுத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சி.சி.ரிவி காட்சிகளின்படி, சந்தேக நபர் சுமார் பத்து நிமிடங்கள் அலுவலகத்திற்குள் கோப்புகளைச் சோதனை செய்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply