நேற்றைய தினம்(27) வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்று திறனாளி மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இன்றுவரை இடுப்புக்கு கீழே இயங்கமுடியாது சக்கரநாற்காலியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துவரும் குறித்த மாணவிகள் இந்த பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளனர்.