பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கச் சம்பந்தப்பட்ட சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அதற்கமைவாக 1 கிலோகிராம் பால் மாப் பொதியின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் பால் மாப் பொதி ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
அண்மைய கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், பால்மாவின் விலையை எவ்வாறு குறைப்பது, என்பது குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இதன்படி மே மாதம் முதல் மீண்டும் குறைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
T01
