உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா!

உலக மக்கள் தொகையில் சீனாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 142 கோடி 57 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவை விட இந்தியாவில் 29 இலட்சம் பேர் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய மக்கள் தொகையில் 68 சதவீதமானோர் 15 தொடக்கம் 64 வயதுடையவர்கள் என்றும், 25 சதவீதமானோர் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட ஆய்வுகளின்படி, இனிவரும் 30 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை 165 கோடியைத் தாண்டும் என்றும், பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply