உரத்தின் விலையை 4500 ரூபாவால்  குறைக்கத் தீர்மானம்!

MOP உர மூட்டை ஒன்றின் விலையை 4500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் 50 கிலோகிராம் உர மூட்டை ஒன்று 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், பல விவசாயிகள் அதனை விலைகொடுத்து  வாங்க முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும், இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, எட்டப்படவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply