மே 09 கலவரத்தின் போது பொலிஸ் வாகனத்திற்குத் தீ வைத்த மூவர் கைது!

கடந்த வருடம் மே 9 அன்று, பஞ்சிகாவத்தைப் பகுதியில் பொலிஸ் வாகனத்திற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிப்படும் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் 18, 31 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு 12 மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்  எனவும் தெரிவிக்கப்படுவதோடு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான கலவரத்தின்போது, பஞ்சிகாவத்தைப் பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றைச் சிலர் அடித்து நொறுக்கியிருந்ததோடு, காருக்குத் தீ வைப்பதற்கு முன்னர் காரின் பாகங்களைத் திருடியதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply