7 மாவட்டங்களில் 71,000 விவசாய குடும்பங்களுக்கு 50 கிலோ யூரியா மூட்டைகள் வழங்கப்படவுள்ளன: விவசாய அமைச்சு

ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சகம் வழங்கவுள்ளது.

அம்பாந்தோட்டை பட்டா அத்தா விவசாய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் இந்த இலவச யூரியா உரப்பைகளுக்குத் தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) என்பன இணைந்து, அதிகாரப்பூர்வமாக விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் இன்று விவசாய அமைச்சுக்கு வழங்கவுள்ளன.

அதிக விளைச்சலைப் பெறுவதற்கான புதிய சாகுபடி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் சாகுபடி முறையை ஊக்குவிப்பதற்காக, நெல் விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்குவதற்கு தேவையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது என அமைச்சர் அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply