பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ ஜனாதிபதி தலைமையில்!

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ (சூரிய மாங்கல்ய) நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ (சூரிய மாங்கல்யம்) நேற்று அக்குரேகொடவில் உள்ள அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. அங்கு, அமைச்சின் ஊழியர்களுடன் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அமைச்சின் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் பல்வேறு விளையாட்டுக்களும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமயமான நடன நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

ஆண்டின் இளவரசர் மற்றும் இளவரசி உட்பட வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

காமினி மகாகமகே (கூடுதல் செயலாளர் – பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகம் மற்றும் நலன்புரி சங்கத்தின் தலைவர்) மற்றும் சித்ராணி குணரத்ன (பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர்) உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply