மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதன் அரசாங்கத்தின் நோக்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிடம் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மனித உரிமை மீறலுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சு வளாகத்தில் சந்தித்தபோதே விஜயதாச இதனை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்களின் பாதுகாப்பிற்காகவும் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தமது நாடு பாராட்டுவதாக அமெரிக்கத் தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேறு சில நாடுகளால் இலங்கை போன்று குறுகிய காலத்தில் நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை என்று ஜூலி சுங் கூறியுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply