கனடாவிலிருந்து மறைத்து எடுத்துவரப்பட்ட 84 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

“குஷ்” என்ற சிறப்புக் கஞ்சா வகையின் சுமார் 84 மில்லியன் ரூபா மதிப்புள்ள கையிருப்பு பேலியகொட லக்சிறி சரக்கு முனையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகள் குழுவினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சரக்குச் சேவை மூலம் கனடாவில் வசிக்கும் ஒருவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட இரண்டு மரப்பெட்டிகளின் அடிப்பகுதியில் குஷ் நிரம்பியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு மரச் சரக்குப் பெட்டிகளின் பொய்யான அடிப்பகுதியில் சுமார் 12 கிலோ எடையுள்ள 24 குஷ் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவைப் பதுக்கியிருந்த பொதிகளை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக, பொதிகளை அனுப்பிய உரிமையாளரால் நியமிக்கப்பட்ட  பிரதிநிதி குறித்த இடத்திற்கு வந்திருந்தார். அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply