O/L பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 25) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மே 29 ஆம் திகதி பரீட்சையை ஆரம்பித்து நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், 2022 G.C.E உயர்தரப் பரீட்சையின் 10 பாடங்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணி நேற்று (ஏப்ரல் 24) ஆரம்பமாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை குறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply