பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றமில்லாமல் இருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 4 ஆம் திகதி எரிபொருள் ஒதுக்கீடு திருத்தப்பட்டது. முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடுகள் 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்கள் 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும், பஸ்கள் 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்கள் 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும், தரை வாகனங்கள் 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரையாகவும், லொறிகள் 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும், சிறப்பு நோக்கம் கொண்ட வாகனங்கள் 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், வான்கள் 20 இலிருந்து 30 லீற்றராகவும் உயர்த்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தற்போதுள்ள QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை கடந்த ஏப்ரல் 18 இல் அவற்றின் பழைய அளவீட்டுக்கே மாற்றுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
T01
