இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கொழும்பில் மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் இலங்கையின் நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர், டொக்டர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 33% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது மூவரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30% பேருக்கு முன்- நீரிழிவுக்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் 50% க்கும் அதிகமான மக்கள் நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு வகைக்குள் வரும் அபாயத்தில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, நாட்டில் நீரிழிவு நிலைமை குறைந்து வந்தது. இருப்பினும், அது இப்போது மோசமாகி மற்றொரு ஆபத்தாக மாறி வருகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
T01
