சினோபெக்குடன் ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டது

சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினோபெக்கின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, சீன எரிசக்தி நிறுவனமான சினோபெக்குடன் அமைச்சர் விஜேசேகர, அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவிற்கு இடையில் நேற்று (ஏப்ரல் 25) அமைச்சின் வளாகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அந்தச் சந்திப்பில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும், அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் தொடங்கும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி (CBSL), முதலீட்டுச் சபை (BOI), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும்  Ceylon Petroleum Storage Terminals Ltd (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply