வசந்த கரன்னகொட விவகாரம் – அமெரிக்கா மீது ரஷ்யா அதிருப்தி

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை  கறுப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பான  அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய லிவன் ஜகார்யன், இலங்கை உட்பட இறையாண்மை கொண்ட நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தமது சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் பேசுகிறோம். அவர்களுக்கு இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. இருந்த போதிலும் இலங்கை உள்ளிட்ட இறையாண்மை கொண்ட நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று அவர் கூறியிருக்கிறார்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது உங்களது (இலங்கை) விருப்பம்.  இதில் யாரும் தலையிடமுடியாது. இது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினை, எனவும், ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “கண்ணாடியால் ஆன வீட்டில் குடியிருந்தால் அங்கிருந்து கற்களை எறியாதீர்கள்!“ என்பதே அது என்றும் லிவன் ஜகார்யன் தெரிவித்திருக்கிறார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply