உலகத் தொழிலாளர் தினத்திலாவது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
வடக்குக் கடலில் நீண்ட காலமாக சட்ட விரோதமான கடற்றொழில் முறைகள் மற்றும் கடல் அட்டைப் பண்ணை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு உலகத் தொழிலாளர்கள் தினத்திலாவது தீர்வு கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கருத்துரையாடி, அவர்களது பிரசசினைக்குத் தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாகக் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை அவரைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
