மூத்த சிங்கள நடிகர் ஜி.ஆர்.பெரேரா காலமானார்

இலங்கை சினிமா, மேடை நாடகம் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் புகழ்பெற்ற மூத்த நடிகர் ஜி.ஆர்.பெரேரா தனது 83 ஆவது வயதில் காலமானார்.

1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்த கல்ஹனகே ரத்னபால பெரேரா, 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு டி.பி இயக்கிய ‘வேலிகத்தாரா’ படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஜி.ஆர். பெரேரா தொடங்கினார்.

அவர் மூன்று இந்தியத் திரைப்படங்கள், இரண்டு அமெரிக்கத் திரைப்படங்கள், ஒரு ஜேர்மன் திரைப்படம் உட்பட ஆறு வெளிநாட்டுப் படங்களிலும் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த பெரேரா இன்று அவரது இல்லத்தில் காலமானதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அவரது இறுதிச் சடங்குகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply