அல்லைப்பிட்டி பகுதியில் கோர விபத்து

நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில்  மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதராசா நிலக்சனா மற்றும் மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கீதாரட்ணம் திவ்யா ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

காரில் பயணித்த வடமராட்சி புலோலியை சேர்ந்தவர்களான சிவசுப்பிரமணியம் சுதாகரன் மற்றும் கருணாமூர்த்தி விமலா தேவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

T03

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply