அக்கரைப்பற்று, காத்தான்குடி, கல்முனை, கிண்ணியா, ஏறாவூர், திருகோணமலை, கந்தளாய், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்படப் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்குத் தீர்வைக் காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை இருப்பதாக இச்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக அரசாங்க ஊழியர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற வேண்டிய நிலை காணப்படுவதாலும் வைத்திய நிபுணர்கள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதாலும் இப்பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கிராமப்புற வைத்தியசாலைகளில் மாத்திரம் காணக்கூடியதாக உள்ள இந்தப் பற்றாக்குறை, எதிர்காலத்தில் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளிலும் உருவாகலாம் என்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
T 03
