களுத்துறை திஸ்ஸ கல்லூரிக்கும் களுத்துறை மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களுக்கிடையில் நேற்று மகொன சர்ரே விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மோதலில் களுத்துறை திஸ்ஸ கல்லூரியின் கிரிக்கட் அணியின் உப தலைவர் காயமடைந்து தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடைசி ஓவரில் களுத்துறை மகா வித்தியாலயம் வெற்றி பெற்றதை அடுத்து மோதல் வெடித்ததாக தெரிவித்தனர்.
காயமடைந்த திஸ்ஸ தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியின் உபதலைவர் முதலில் நாகொட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரை அவசர சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
T 03
