துறைமுகம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மாத்திரமன்றி இந்நாட்டிலுள்ள புராதன பாறைக் கோட்டையான சீகிரியவையும் தனியார் மயமாக்க வேண்டியது அவசியமானது என ஜாதிக நாமல் உயன நிறுவனர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்தார். அது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதுடன் மக்களுக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வருடம் அரச வெசாக் விழா நடைபெறவுள்ள சிலாபம் கெபெல்லாவ ஸ்ரீ ரத்தனசிறி பிரிவேனாவிற்கு விஜயம் செய்தபோதே ராகுல தேரர் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“நாட்டின் நிறைவேற்று அதிகாரியாக இருப்பவர் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடுமையான ஆட்சியை நடத்த வேண்டும். இல்லையேல் இந்த நாடு அபிவிருத்தி அடையாது” என தேரர் மேலும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கத்தை பல வருடங்கள் வழிநடத்த வேண்டும்.
ஜனாதிபதி ஒரு திருடன் அல்ல, ஆனால் அவர் திருடர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முடியும். இப்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. உண்மையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை.
ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டுக்கு தேவையான நல்ல விடயங்களை செய்ய முடியும், எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
T02
