சுங்க விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஆஸி – இலங்கை ஒப்பந்தம்!

சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்திற்கும் அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இரு நாடுகளினதும் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு, சுங்க விடயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர உதவி ஆகியவை முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளதாக அமைச்சரவை முடிவுகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply