பெலாரஸில் இலங்கை மருத்துவ மாணவனின் மரணம்; விசாரணை ஆரம்பம்

பெலாரஸில் உள்ள க்ரோட்னோ மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தனது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெலாரஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திசான் குலரத்ன என்ற மாணவனே உயிரிழந்துள்ளதவராவார். கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இம்மாணவன் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்ததன் பின்னர் வைத்தியராகும் கனவோடு பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் கற்றுவந்தார்.

குறித்த மாணவர் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் படித்து வந்த நிலையிலேயே அவர் உயிரழந்துள்ளார். இவர் தனது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுக் கல்வியின்போது மிகவும் திறமையான மாணவருக்கான விருதுகளையும் வெற்றி பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களைச் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் மிகவும் நட்புடனும் பழகியுள்ளார்.
மாணவனின் தாய் தனது மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, அவர் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அழைப்புகள் பதிலளிக்கப்படாததால், அவரது தாயார் சக மாணவர்கள் சிலரை அழைத்து  விசாரித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால், மாணவர்கள் அவரது விடுதிக்குச் சென்று அவரது சடலத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த இலங்கை மருத்துவ மாணவர் கடந்த 29ஆம் திகதி இரவு 11.00 மணி வரை தனது கைத்தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என பெலாரஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply